Advertisment

தாயின் இறுதிச் சடங்கிற்கு சங்கு ஊதுபவரை அழைத்து வரச் சென்ற மகன் உயிரிழப்பு! 

son also passed away on the same day as the mother

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச்சேர்ந்த சாமிநாதன் என்பவரது தாய் சின்னபொண்ணு. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நிகழ்விற்காக விருத்தாசலம் அடுத்த கார்கூடல் கிராமத்தில் உள்ள சங்கு ஊதும் கலைஞர்களை அழைத்து வர மகன் ஞானவேல்(46), தனது உறவினர் பாபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது பூதாமூர் துணை மின்நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஞானவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாபு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் ஞானவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் இறுதிச்சடங்கு நிகழ்விற்காக சங்கு ஊதும் கலைஞரை அழைத்து வரச் சென்ற மகன் சாலை விபத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

mother virudhachalam Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe