A son addicted to alcohol and cannabis

மதுரையில் மது பழக்கத்திற்கு அடிமையான மகனின்கைகால்களை கட்டி தந்தையேகிணற்றில் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள கொட்டக்குடி கிராமப் பகுதியைச்சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ராஜபிரபு அதீத மது மற்றும் கஞ்சா ஆகியவற்றைபயன்படுத்தி அவற்றால் அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திலும்ஊர் மக்களிடமும்சண்டையிடுவது தொடர்கதையாகிப் போனது. இதனால் பெருமாள் அவரது மகன் ராஜபிரபுவை அடிக்கடி எச்சரித்து வந்தார்.

இந்நிலையில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தந்தை பெருமாள் நேற்று இரவு ராஜபிரபுவை லுங்கியால் கை கால்களை கட்டி கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில் கிணற்று பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப் படையினர் ராஜபிரபுவின் உடலைக் கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்குபிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

கொலையில் ஈடுபட்ட ராஜபிரபுவின் தந்தை பெருமாள் மற்றும் அவருக்கு உதவிய உறவினர் என இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் தந்தையாலேயே கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.