ADVERTISEMENT

ஆளுநர் பதவி எதற்கு என பல வருடங்களுக்கு முன்பே கேட்டவர் கலைஞர்... சோம்நாத் பாரதி

01:10 PM Aug 31, 2018 | kamalkumar

நேற்று சென்னையில் நடந்த ‘கலைஞர் புகழஞ்சலி’ கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சோம்நாத் பாரதி கூறியது,

ADVERTISEMENT


ADVERTISEMENT

எங்கள் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உங்களிடம் ஒரு தகவலை தெரிவிக்க சொன்னார், அது என்னவென்றால் உறவினர் இறந்ததால், இங்கு வருவதற்கு தயாரக இருந்தும் வர இயலவில்லை என்பதே. அவர் சார்பாக கலைஞருக்கு அஞ்சலி செலுத்த நான் வந்துள்ளேன். டாக்டர் கலைஞரின் உடன்பிறப்புகளே வணக்கம், கலைஞர் 80 ஆண்டுகால அரசியல் வாழ்வைக்கொண்ட மிகப்பெரிய தலைவர். இன்று புதுச்சேரி முதல்வர் கவர்னர் பதவி எதற்கு என்று கேட்கிறார், டெல்லியில் உள்ள எங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது, ஆனால் கவர்னர் எதற்கு என பல வருடங்களுக்கு முன்பே கேட்டவர் கலைஞர். அவர்தான் முதலில் சிறுபான்மையினரின் உரிமை குறித்து பேசினார், சுயமரியாதை குறித்து பேசியவர், முதல்வர்கள் கொடியேற்ற வேண்டும் என முதன்முதலில் பேசியவரும் அவரே. பாரதமாதாவின் உண்மையான பிள்ளை அவர். கலைஞருக்கு பாரதரத்னா வழங்க எங்களின் கட்சியின் மூலம் ஆதரவளிக்கிறோம். அவர் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் நிறைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT