Advertisment

சமூகவலைதளங்கள், நண்பர்களை தவிர்த்தால் முதல்முறையே வெற்றிபெறலாம்- கீர்த்திவாசன்

யு.பி.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார் தருமபுரியை சேர்ந்த கீர்த்திவாசன்.

Advertisment

2017-ஆம் நடத்தப்பட்ட யு.பி.எஸ் தேர்விற்கான முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் தேர்வெழுதிய 13 ஆயிரம் பேரில் 2567 பேர் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். மேலும் நேர்முகத்தேர்வில் பங்குபெற்ற 2567 பேரில்990 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Advertisment

ias

மேலும் இந்த வருடம் யு.பி.எஸ் தேர்வில் தமிழக அளவில் முதல்இடம்பிடித்துள்ள தருமபுரியை சேர்ந்த கீர்த்திவாசன் அகில இந்திய அளவில் 29-ஆவது இடத்தினை பிடித்துசாதனைபடைத்துள்ளார்.அதேபோல் சென்னையை சேர்ந்த மதுபாலன் தமிழக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் 71-ஆவது இடமும் பிடித்துள்ளார், மூன்றாவது இடத்தை தாம்பரத்தை சேர்ந்தசாய் ஸ்ரீதர் பிடித்துள்ளார். இந்திய அளவில் 106-வது இடத்திலும் உள்ளார். போன யு.பி.எஸ் தேர்வில் தமிழகத்தில் தேர்வானவர்களில் 78 பேர் ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகினர் ஆனால் இந்த ஆண்டில் ஐ.ஏ.எஸ் பணிக்கு 42 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்த தருமபுரியை சேர்ந்த கீர்த்திவாசன் தனது வெற்றிபற்றி கூறுகையில் சமூகவலைதளங்கள், நண்பர்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டுபடித்தால் முதல்முறையே வெற்றிபெறலாம் என கூறியுள்ளார்.

examination ias student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe