''ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியவை நடக்கும்''-ஸ்டாலின் பேச்சு

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கி அவர் தமிழக எல்லையை வந்தடைந்தார். இதனால் தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''பெங்களூருவிலிருந்து ஒருவர் கிளம்பிவிட்டார். இனி நடக்கவேண்டியவை நடக்கும். முன்னே 200 தொகுதிகளில் திமுக வெல்லும் எனச் சொல்லியிருந்தேன். தற்பொழுது சொல்கிறேன் 234 தொகுதியிலும் திமுக வெல்லும்'' என்றார்.

sasikala stalin
இதையும் படியுங்கள்
Subscribe