‘எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது’ - பிரச்சாரத்துக்கு நடுவே டீக்கடையில் இபிஎஸ்

'Somehow the problem was solved'-Edappadi Palaniswami at the tea shop

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.'எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது' என்றடோனில் தற்பொழுதுதான் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.

அதிமுக சார்பில்ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டீ போடுவது, இஸ்திரி போடுவது என பழைய பாணியை பின்பற்றிவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிமுன்னாள் அமைச்சர்கள்செங்கோட்டையன், தங்கமணி மற்றும்அதிமுக நிர்வாகிகள்மற்றும் கூட்டணிக் கட்சியான தமாகாவை சேர்ந்த யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து டீக்கடை ஒன்றில் கூலாக டீ சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இடைத்தேர்தல் போட்டியில் டி.டி.வி.தினகரனின்அமமுக பின்வாங்கியதைத் தொடர்ந்து, நாம் தமிழர், தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகள் ஈரோடு கிழக்கில் தனித்து களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admk
இதையும் படியுங்கள்
Subscribe