some people pushes medical shop Nagapattinam

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப் உள்ளது. இதன் உரிமையாளர் சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனது மெடிக்கல் ஷாப்பில் நோயாளிகளை பார்த்து வருகிறார்.

Advertisment

some people pushes medical shop Nagapattinam

Advertisment

இந்த நிலையில் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நீண்ட நாளாக பழக்கடை நடத்திவரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறனுக்கும் சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகத்திற்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

some people pushes medical shop Nagapattinam

இருதரப்பையும் பேச்சு வார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்த நிலையில் சண்முகம் தரப்பினர், திமுக வார்டு செயலாளர் பாபுவை அழைத்து வந்துள்ளனர். பாபு, சண்முகத்திற்கு ஆதரவாக பேசிய நிலையில் அதை சித்த மருத்துவர் ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். அதை தடுக்க வந்த மருத்துவரின் தாய் சாந்தி மற்றும் மருத்துவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாந்தி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.