Skip to main content

‘குடி’மகன்களின் கூடாரமாக மாறி வரும் அரசு பள்ளி வளாகம்!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

some people drinking liquor in government school premises in Erode

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தின் உள்ளே குடிமகன்கள் நுழைந்து, அங்கு மது அருந்துவது தொடர்கதையாகி வருகிறது. மது பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.

 

குறிப்பாக கர்நாடக மதுபாக்கெட் பள்ளி வளாகத்தில் உள்ளே குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்தும் குடிமகன்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் தூங்கச் சென்ற பெண்ணுக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
1.50 lakh cash was stolen by breaking lock of  female house

ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் கே.டி.கே. தங்கமணி வீதியைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(36). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு  இறந்துவிட்டார். ஜோதிலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி கட்டட வேலை பார்த்து வருகிறார். ஜோதிலட்சுமி வீட்டின் அருகே அவரது தாய் வீடும் உள்ளது.

தினமும் இரவு ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன்கள் அருகில் இருக்கும் தாய் வீட்டில் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் ஜோதிலட்சுமி தனது மகன்களுடன் அருகில் இருக்கும் தாய் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டனர். இன்று காலை ஜோதிலட்சுமி எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையின் பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபட்டில் ஒரு மொபட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சூரம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.