Skip to main content

தாம்பரம் உள்ளிட்ட சில நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

பரக

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. தினமும் துறைவாரியான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அமைச்சர் கேன்.என். நேரு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை ஒன்றினைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளாக மாற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்; பாஜக நிர்வாகிக்கு சம்மன்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Summons to BJP executive in case Rs 4 crore in Chennai to Nellai train

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த  06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Next Story

“திமுக ஆட்சிக் காலத்தில்தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Minister K.N. Nehru says All projects have been completed during DMK regime

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி செய்யும் காலத்தில் தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் வந்தாலும் லால்குடி தொகுதிக்கு நிறைவேற்றப்படும். கொள்ளிடம் பாலம், விவசாய கல்லூரியில் கலைக் கல்லூரி, மகளிருக்கான ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு அடிப்படை தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம்,  பேரூராட்சி அலுவலகம், திருச்சி - சென்னை சாலை மற்றும் சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில்புதிய இணைப்புச் சாலைகள் நடைபெற அதற்கான ஆயத்த பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதுபோல புதிய பல்வேறு திட்டங்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் பத்தாண்டுகளில் லால்குடி சட்டமன்றத் தொகுதியை அ.தி.மு.க புறக்கணித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல் புறக்கணித்து வந்தன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்பொழுதெல்லாம் ஆட்சி செய்கிறதோ அப்பொழுதெல்லாம் லால்குடியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றி பேசினார். அதனைத் தொடர்ந்து மணக்கால், ஆங்கரை, திருமங்கலம், வாளாடி புது ரோடு, புதுக்குடி, சிறு மருதூர், மகிழம்பாடி, நெய் குப்பை, புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி பல்லபுரம், பூவாளூர் பேரூர் கழகம் உட்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிக்கும் போது மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, லால்குடி நகர் மன்ற தலைவர் துணைமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன்,  மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் குரு அன்பு செல்வன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.