Some metal found in fishermen's net ..! Shocked fishermen ..!

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை கடலோரக் காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். அவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில், வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வலையில் விலாங்கைப்போல இரும்பாலான மர்ம பொருள் ஒன்று சிக்கியது.

Advertisment

அதனைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலில் கிடைத்த மர்ம பொருளோடு உடனடியாக கரைக்குத் திரும்பியவர்கள்கிராம பஞ்சாயத்தாரிடம் கூற, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கீழையூர் கடலோரக் காவல் குழும போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததில், மீனவர்களின் வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. பிறகு ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றிய போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.