kulam

Advertisment

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுடன் திருநாவுக்கரசரும் வந்தார். ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தனர். கலைஞருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் குலாம் நபி ஆசாத்திடம் சிகிச்சைகள் குறித்து கூறினர்.

ass

பின்னர் வெளியே வந்த குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’திமுக தலைவர் கலைஞர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை. அவரின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்தேன். கலைஞரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisment

ass1

தலைசிறந்த மருத்துவர்கள் கலைஞருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று சில தினங்களில் கலைஞர் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்’’என்று தெரிவித்தார்.