Solomon Pappaiah wife lost his life CM MK Stalin obituary

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியராக பணியாற்றியவருமான சாலமன் பாப்பையா மதுரையில் உள்ள ஞான ஒளிபுரம் என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (வயது 86) ஆவார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் ஜெயபாய் வயது முதிர்வு காரணமான இன்று (12.01.2025) காலை காலமானார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அவரது உடல் தத்தனேரியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுமக்கள், தமிழஞறிர்கள், கலைத்துறையினர், திரைத்துறையினர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜெயபாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் துணைவியார்ஜெயபாய் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் சாலமன் பாப்பையாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.