Soldier Lakshman's body arrived in Madurai!

Advertisment

ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 4 வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லஷ்மணன் (24) என்பது தெரியவந்தது. வீரமரணம் எய்திய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Soldier Lakshman's body arrived in Madurai!

Advertisment

இந்நிலையில் அவரது உடலானது விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது இயக்குனர் அலுவலகம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல் கொண்டு செல்லப்பட இருக்கிறது.