The soldier who fainted on the day of completion of the work

தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் - கோமதி தம்பதி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரவிக்குமார் பஞ்சாப் பாட்டியாலா ரெஜிமெண்ட் ராணுவப் பிரிவில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்துவந்தார். ரவிக்குமார் ராணுவப் பிரிவில் சேர்ந்து பணியாற்றி கடந்த அக். 31ஆம் தேதியுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்தன.

Advertisment

இதனால் அங்கு அவருக்குப் பணிநிறைவு உபசாரவிழா கடந்த 29ஆம் தேதியன்று நடந்திருக்கிறது. அந்த விழாவின்போது திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார் ரவிக்குமார். பதறிப்போன ராணுவ வீரர்கள் அவரை உடனே சிகிச்சைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

The soldier who fainted on the day of completion of the work

அதன்பின் அவரது சொந்த ஊரான கீழ விளாத்திகுளத்திலிருக்கும் அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ரவிக்குமாரின் சொந்த ஊரான கீழ விளாத்திகுளத்திற்கு நேற்று முன்தினம் (31.10.2021) இரவு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் அங்கு தகனம் செய்யப்பட்டது. தனது பணி நிறைவு நாளின்போது ரவிக்குமார் மரணமடைந்தது கிராமத்து மக்களைத் துக்கத்தில் ஆழ்த்தியது.