தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் வளைய சூரிய கிரகணத்தை 20 ஆயிரம் பேர்கள் கண்டு களித்தனர்.

Advertisment

Solar-Eclipse-people enjoyed

சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல், பூமியில் விழும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. இதனை காலை 8.05 மணி முதல் 11.20 வரை கடலூர், நெய்வேலி, மந்தார குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், ஸ்ரீ முஷ்ணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அறிவியல் இயக்கம் தயாரித்து வழங்கிய பிரத்யேக கருவி மற்றும் சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடி மூலம் மாணவர்கள்,பொது மக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

கிரகணத்தின் போது வெளியில் செல்லக்கூடாது, உணவு உண்ணக்கூடாது, கிரகணம் விலகியதும் குளிக்க வேண்டும் போன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத தகவல்களை நம்ப தேவையில்லை என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் வல்லுனர்களும தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Solar-Eclipse-people enjoyed

Advertisment

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.விஜயகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.தாமோதரன் தலைமையில் பந்து மற்றும் கண்ணாடி துண்டை பயன்படுத்தி சூரிய ஒளியை வீட்டுக்குள் பிரதிபலிக்க செய்து கிரகணத்தை வீட்டுக்குள் இருந்தபடியே காணும் முறையும் சாதாரண அட்டைகளில் துளை ஏற்படுத்தி உதவியுடன் தரையில் விழும் பிம்பத்தில் சூரிய கிரகணத்தை காணும் எளிய முறையும் பள்ளிகளில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த சூரிய கிரகணத்தை 2031 ஆம் ஆண்டில் தான் பார்க்க இயலும். மீண்டும் கடலூர் மாவட்ட மக்கள் 350 வருடம் கழித்து தான் காண முடியும் என்பதால் அனைவரும் இந்த நிகழ்வை மிகவும் ஆர்வமுடன் ஆச்சர்யமாய் கண்டு மகிழ்ந்தனர்.

கடலூர் சில்வர் பீச் கடற்கரை, பண்ருட்டியில் உள்ள ஜான் டூயூ பள்ளி, நெய்வேலி சிபிஎஸ் அருகில் மந்தாரகுப்பதில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஜெயவீர பாண்டியன், பரமேஸ்வரி,உதயெண் திறன்,தாமரை செல்வி,பேபி மாலா மற்றும் சசிகலா தலைமையில் நான்கு இடங்களில் வான் நோக்கி மூலம் கிரகணம் காண்பிக்கப்பட்டது. பண்ருட்டியில் பொது மக்களுக்கு பொங்கல் வழங்கி சாப்பிட வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் விக்டர் ஜெயசீலன், பாலகுறுநாதன், தெரசா கேத்தரின், துணை செயலாளர் பாலு, மற்றும் சுகந்தி, செல்வின் ராஜ், மோகன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.