/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kamal Haasan 88.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
தமிழகம் முன்னேற வேண்டும், ஊழலுக்கு விடை கொடுக்க வேண்டும் என்கிற ஒத்த கருத்துடையவர்களிடம் தான் கூட்டணி வைப்போம். மேலும் இடஒதுக்கீடு என்பது ஒரு காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த காரணம் நீங்கிய பின்னர் இடஒதுக்கீட்டை நீக்கலாம். தற்போது அந்த காரணம் நீங்கவில்லை. இடஒதுக்கீட்டில் எவ்வித குந்தகம் இல்லாமல் உள்ஒதுக்கீடு என்பது இருக்க வேண்டும். இந்த பூமியை சிலர் ஆன்மிக பூமி, விவசாய பூமி, பெரியார் மண் என்று கூறுகிறார்கள். இந்த மண் மூவருக்கும் சொந்தமானது என்பதுதான் எனது கருத்து.
ஓட்டுரிமையை பெறுவது எப்படி என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செய்யும். நீங்களும் அதை மக்களுக்குஉணர்த்த வேண்டும். நடிகர் என்பது எனது தொழில், மக்களுக்கு பணி செய்வது எனது கடமை. இந்த பணி தொடரும். இவ்வாறு கூறினார்.
Follow Us