Advertisment

பிணையில் விடுதலையான விவசாயிகள்; மாலை அணிவித்து வரவேற்ற சமூக அலுவலர்கள் 

Social workers welcomed the bailed farmers with garlands

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க அரசின் சிப்காட் அலகு மூன்று தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக 11 கிராம விவசாயிகள் போராடி வந்தனர். அதில் முக்கியமான 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் கடலூர், புழல், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Advertisment

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர் தொடர்ச்சியாக விவசாய சங்கர்களும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஏழு பேரில் ஆறு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கூறியிருந்தார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது அதனைத் தொடர்ந்து நீதிபதி 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisment

வேலூர் சிறையில் இருந்த சதாசிவம், மாசிலாமணி, அண்ணாமலை, பாபு, பாக்யராஜ், பெருமாள், பாலாஜி, சுந்தரமூர்த்தி, ராஜதுரை, வெங்கடேசன், முருகன், விஜயன், திருமலை, துரைராஜ், அன்பழகன் ஆகிய 15 விவசாயிகளும் வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வந்தனர். இதில், மாசிலாமணி, பாக்கியராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து பின்பு முதல்வரால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்ற சிறையில் உள்ள விவசாயிகளும் பிணையில் வெளியே வந்தனர்.

bail Farmers thiruvannaamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe