Skip to main content

பிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்களா கலந்துகொண்டார்கள். இந்த நிலையில்  புகையிலை ஒழிப்பு மக்கள் அமைப்பின்' ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து  தனியாக புகார் அனுப்பியுள்ளார். 
 

kamal



அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள புகைப் பிடிக்கும் பகுதி திறந்த வெளியில் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது, புகை பிடிக்கும் பகுதி அமைக்க ஓட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற ஒரு சில இடங்களுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போன்று கோடிக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இடம்பெற அனுமதி இல்லை, இவை புகையிலை ஒழிப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீதும், தொலைகாட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என புகாரில் கோரியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

'அந்த ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது''-கமல்ஹாசன் பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'It's our home remote... our home TV' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் 27-ம் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக கமல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ''பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். என் அரசியல் எதிரி சாதியம்தான். ரிமோட்டை எடுத்து அடிச்சீங்களே டிவியில ஆனால் இறுதியில் அங்கேயே  போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது. டிவியும் அங்கேயே தான் இருக்கிறது. நம்ம வீட்டு ரிமோட் நம்ம வீட்டு டிவி. ஆனால் அந்த டிவிக்கான கரண்டையும் ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவக்கூடிய சக்தி ஒன்றியத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை இனிமேல் நான் எறிந்தால் என்ன வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செயல்களுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும். 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்'' என்றார்.