தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமீரா மிதுன், தினமும் சர்ச்சை வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அதோடு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது அடிக்கடி குற்றம் சாட்டிவருகிறார். இந்த நிலையில் மீரா மிதுன் புகை பிடிப்பது போல் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
அதோடு பாரில் ஆண் நண்பர் ஒருவருடன் நடனம் ஆடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருத்தர், நீ மட்டும் என் நேர்ல வந்தா அசிங்க அசிங்கமா பேசி பச்சை பச்சையா கேட்பேன் என்று கடுப்பாகி திட்டியுள்ளார். இன்னும் ஒரு சிலர், உண்மையான தமிழ் பொண்ணு கையாள அடி வாங்குற பாக்கியம் உனக்கு ஒருத்திக்குதான் இருக்கு. நீ அதற்கு தகுதியானவள் என்றும், நீயெல்லாம் குட் டச் பேட் டச் பத்தி பேசலாமா... நீ பண்றதுலாம் சிரிப்பு கூட வரல அருவருப்புதான் வருது என்றும் கூறியுள்ளார்கள். மேலும் மீராவை திட்டும் நெட்டிசன்கள் கோ பேக் மீரா என்ற ஹேஷ்டேக்கையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.