சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது.இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும். சைபர் குற்றத்தை தடுக்க சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்னை இணைக்கக்கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

social media companies activities chennai high court shock

Advertisment

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை போல் வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒத்துழைப்பு தரவில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். அதனை தொடர்ந்து வலைத்தளங்களை கண்காணிக்க சட்ட இயற்றப்படுமா? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை அக்டோபர் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.