




Published on 12/01/2022 | Edited on 12/01/2022
இன்று சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சென்னை ஐஐடி கல்லூரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கில் சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் சிபிசிஐடி மூலம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என கோரி சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.