Skip to main content

அரசு வேலை வாய்ப்புகளில் சமூக அநீதி? - கேள்விக்குறியாகும் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ தகுதிகள்!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Social injustice in government jobs? - Questionable ITI. And Diploma Qualifications!

 

ஏதாவது ஒருவகையில், சமூக அநீதி தலைதூக்கிவிடுகிறது. இதனை முறைப்படுத்துவதற்கென, சுப.வீரபாண்டியனைத் தலைவராகக் கொண்டு சமூக நீதி கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை இக்குழு கண்காணித்து வருகிறது. இக்குழுவிற்கு தமிழ்நாடு டிப்ளமோ மாணவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். 


அதில், ‘தமிழ்நாட்டில் 436-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் Diploma In Civil Engineering முடித்துவிட்டு,  ஆண்டுதோறும் சுமார் 12,000 மாணவர்கள் வெளி வரும் நிலையில்,  சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட DCE முடித்தவர்கள் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு 5.03.2021 அன்று முதன் முறையாக வெளியிடப்பட்டது. அதில்,  கல்வித்தகுதி DCE அல்லது அதற்குச் சமமான கல்வி எனக் கொடுக்கப்பட்டுள்ளது.  


TNPSC-இல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி மூலம், டிப்ளமோ படிக்காமல் நேரடியாக B.E. படித்தவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படியும், அரசாணைப்படியும் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்திடவேண்டும்.’ எனக் கோரப்பட்டுள்ளது.

 

Social injustice in government jobs? - Questionable ITI. And Diploma Qualifications!

 

இதனைத் தொடர்ந்து, அரசு முதன்மைச் செயலாளர் – நெடுஞ்சாலைத்துறை,  கூடுதல் அரசு முதன்மைச் செயலாளர் – பொதுப்பணித்துறை மற்றும் செயலாளர் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியோருக்கு சமூக நீதி கண்காணிப்புக்குழு எழுதிய கடிதத்தில் ‘பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள்தான் டிப்ளமோ முடித்தவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படியும், நீதிமன்றத் தீர்ப்பின்படியும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிசெய்திட, இக்குழு பரிந்துரைக்கிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

  
நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர் ஒருவர் “இது முற்றிலும் கிராமப்புற மாணவர்கள் சந்தித்துவரும் சமூக அநீதியாக உள்ளது. பாலிடெக்னிக்கில் படித்த டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பினை, பி.இ. படித்த பொறியாளர்கள் தட்டிப்பறித்துவிடுகிறார்கள். அதுபோல், ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை, டிப்ளமோ படித்தவர்கள் ஆக்கிரமித்துவிடுகின்றனர். ஐ.டி.ஐ. படித்தவரும் டிப்ளமோ படித்தவரும் ஒருசேர வரும்போது, ஐடிஐ முடித்தவருக்கு வேலை கிடைக்காது. டிப்ளமோ முடித்தவரும், பி.இ. படித்தவரும் விண்ணப்பிக்கும்போது, டிப்ளமோ படித்தவருக்கு வேலை கிடைக்காமல் போய்விடும். எந்தத் தகுதிக்கான வேலையோ, அந்தத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். இல்லையென்றால், டிப்ளமோ படித்தவர்கள் ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்குப் போட்டியாகவும், பி.இ. படித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்களுக்குப் போட்டியாகவும் களத்தில் இறங்கும்போது, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசுப்பணி என்பது வெறும் கனவாகிவிடும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும்கூட, கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை அறியாதவர்களாக இருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். உள்ளார். இவர், தமிழக முதலமைச்சரின் நன்மதிப்பைப் பெற்ற நேர்மையாளர். இவரது துறையில் விண்ணப்பிப்பதற்கும்கூட, ஐ.டி.ஐ. கல்வித்தகுதி அல்லது டிப்ளமோ எனத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார் வேதனையுடன்.   

 


ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ மாணவர்கள்,  சமூக நீதி அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு,  தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அரசு வேலை வாங்கிக் கொடுக்க ஐபிஎல் வீரரிடம் பேரம்" - முதல்வர் குற்றச்சாட்டு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

punjab chief minister bagavath singh maan press meet ipl cricketer issue

 

அரசு வேலை வாங்கிக் கொடுக்க ஐபிஎல் வீரரிடம் பேரம் பேசப்பட்டதாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான்  குற்றம்சாட்டியுள்ளார்.

 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர் பேசுகையில், "விளையாட்டு வீரர் ஜாஸ் இந்தர் சிங் ஐபிஎல் அணியின் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவர் பிளேயிங் 11 இல் இல்லை. பஞ்சாப் பவனில் ஜாஸ் இந்தர் சிங்கும் அவரது தந்தையும் அப்போதைய முதல்வர் சன்னியை சந்தித்தனர். அப்போது சரண்ஜித் சிங் சன்னி, அவர்களின் வேலை முடியும் என்றும் தனது மருமகன் ஜஷானை சந்திக்குமாறும் கூறியுள்ளார்.

 

இவ்வாறு கூறிய நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றிருந்த போது கிரிக்கெட் வீரர் என்னை சந்தித்தார். அப்போது அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன் அந்த வேலையை வாங்கிக் கொடுப்பதற்கு ஜஷான் 2 கோடி ரூபாய் கேட்டதாக என்னிடம் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சரண்ஜித் சிங் உரிய பதிலளிக்கவில்லை எனில் மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவேன். விளையாட்டுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் பேசி ஜாஸ் இந்தர் சிங்கின் அரசு பணிக்கான ஏற்பாடுகளை செய்வோம். மேலும் ஜாஸ் இந்தர் சிங்க்கு உரிய உரிமைகளை வழங்குவோம். இந்த சம்பவத்திற்கு சரண்ஜித் சிங் சன்னி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பின் போது அவருடன் ஐபிஎல் வீரர் ஜாஸ் இந்தர் சிங் மற்றும் அவரது தந்தை மஞ்சிந்தர் சிங் ஆகியோரை உடன் அழைத்து வந்திருந்தார். மேலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியுடன் மஞ்சிந்தர் சிங் இருக்கும் படங்களையும் முதல்வர் காட்டினார். 

 

 

Next Story

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; விருதுநகர் மாவட்ட பாஜக தலைவர் கைது 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

virudhunagar west district bjp chief government job related incident 
சுரேஷ்குமார் - கலையரசன்

 

விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலையரசனும் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம், அவருடைய மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2017ல் ரூ.11 லட்சம் பெற்றனர்.  கடந்த 5 வருடங்களாக வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.

 

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாண்டியன் முறையிட,  ரூ.2 லட்சம் வீதம் 5 காசோலைகளும், ரூ.1 லட்சத்துக்கு ஒரு  காசோலையும் பாண்டியனிடம் தந்தனர். அதில் ஒரு காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். மற்ற  காசோலைகள் வங்கியிலிருந்து திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம்  பாண்டியன் புகாரளித்திருந்தார். அவரது புகாரில் பா.ஜ.க. மாநில பொதுச்  செயலாளர் ராம ஸ்ரீனிவாசனின் பெயரும் இருந்தது.

 

இதுகுறித்து நாம் ராம ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, “நான் ரயில்வேயில் எந்த பொறுப்பிலும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் எதற்காக என்னை சிவகாசி பெல் ஹோட்டலுக்கு வந்து பார்க்க வேண்டும். அவர்களிடம் பாண்டியன் பணம் கொடுத்த விபரம் எனக்கு தெரியாது. என் மீதான பொய்யான குற்றச்சாட்டு இது.” என்று  மறுத்தார். 15-12-2022 அன்று கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷ்குமாருக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம், ரூ.5,50,000 ரொக்க ஜாமீன் செலுத்துமாறு அறிவுறுத்தியது. ரொக்க ஜாமீன் செலுத்துவதற்கான காலக்கெடு மே 12 ஆம் தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பா.ஜ.க.வில் யாரோ ஒரு முக்கிய தலைவர் ஏதோ ஒரு காரணத்துக்காக  சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுகிறார் எனச் சந்தேகம் கிளப்பும் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வினர், மோசடி விவகாரம் வெளிப்பட்டு 5 மாதங்கள் கடந்தும்,  சுரேஷ்குமார் கைதாகியும் கூட, அவரை விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து இன்னும் நீக்கவில்லையே என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.