/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2-2_37.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் களபம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இறந்த அணிலை கையில் வைத்துக் கொண்டு, “நான் வெளியூர் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் ஏறி ஒரு அணில் இறந்துவிட்டது. மற்றவர்களைப் போல என்னால் கடந்துபோக முடியவில்லை. அணிலும் ஒரு உயிர்தானே. அப்படியே கிடந்தால் அடுத்த வாகனம் ஏறி நைந்து போகும். அதனால் இறந்த அந்த அணிலை எடுத்து வந்து என் குழந்தைகளோடு ஒரு இடத்தில் குழி தோண்டி பூ தூவி, பால் ஊற்றி அடக்கம் செய்தோம். இறந்த ஒரு உடலுக்கு செய்ய வேண்டிய அத்தனை மரியாதைகளும் செய்துவிட்டோம்.
வாகனங்களில் போகும் போது தண்ணீர், உணவுக்காக சாலைகளை கடக்கும் உயிரினங்கள் மீது வாகனங்கள் மோதாமல் கவனமாக செல்வோம். எதிர்பாராத விதமாக மோதிவிட்டால் அருகில் ஓரமாக குழி தோண்டி புதைத்துவிட்டு போகலாம்” என்று இளவரசன் பேசும் அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் சமூக ஆர்வலருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)