Skip to main content

பொங்கல் பரிசை அரசிடம் திரும்பக் கொடுத்த சமூக ஆர்வலர்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
pongal gift

 

காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கோ.ரா. ரவி. இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தியிடம் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்கினார். இதுத்தொடர்பாக நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியில், பாலாற்று விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர் வளத்தைக் காக்க பல வருடமாக பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அரசு சார்பிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கடந்த முறை பெய்த பெரிய மழை சுமார் 39 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வீணாகக் கடலில் கடந்தது. அரசு நிதி ஒதுக்கி தடுப்பணை கட்டி இருந்தால் தற்போது எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டிருக்காது. மாறாக அரசு பொங்கல் சிறப்பு பரிசு என்ற பெயரில் பல நூறு கோடியை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆகவே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பணத்தையும், பரிசு பொருட்களையும் நான் அரசிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டேன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.