திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு அழைத்து வரப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு முகிலன் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.