Advertisment

முகிலனுக்கு ஜாமீன் வழங்கியது- உயர்நீதிமன்ற மதுரை கிளை!

சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Advertisment

மூன்று நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு. சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார்.

social activist mugilan bail high court madurai branch

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர்,திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார்.

Advertisment

தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

order madurai high court bail mugilan social activist
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe