ADVERTISEMENT

உணவு கிடைக்காமல் தவித்த வடமாநில கூலிதொழிலாளர்களுக்கு சப்பாத்தி வழங்கிய சமூக ஆர்வலர்!

06:32 PM Apr 10, 2020 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்ல் பீகார், ஒரிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட பணிகளில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவருகிறார்கள்.

ADVERTISEMENT



இவர்கள் கரானோ தொற்று ஊரடங்கு உத்தரவையொட்டி, வேலையில்லாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமபட்டு வந்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் சிதம்பரம் சிவில் இன்ஜினியர் அசோசியன் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் ஒரு வாரம் வந்துள்ளது. அதன்பிறகு அவர்கள் பசியால் அவதி அடைவதாக சிதம்பரம் ஷண்முகவிலாஸ் கடையின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான கணேஷ்க்கு சிதம்பரம் காவல்துறை சார்பில் தகவல் தெரியவர, அவர் சம்பந்தப்பட்ட வடமாநில கூலித்தொழிலாளர்கள் அனைவருக்கும் சப்பாத்தியை நேரிடையாக சென்று வழங்கியுள்ளார். இதனை பெற்ற தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் காவல்ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஊரடங்கில் ஏழை மக்களை நோக்கி பல்வேறு உதவிகளை சிலர் செய்துவருகிறார்கள். மொழிபிரச்சனையால் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கும் வடமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களுக்கு உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT