Advertisment

அப்போ அது அஜித் இல்லையா... கால்கடுக்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்

So is it Ajith or not... Shock for the fans who were waiting for him

அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளிட்ட சில நகரங்களில் நடைபெற்று வந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா சாலை அருகே உள்ள எல்ஐசியில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அதில் அசோக் லேலண்ட் வாகனத்தின் மீது முகமூடி அணிந்து கொண்டு அஜித்தும், அவர் அருகில் மஞ்சு வாரியரும் அமர்ந்திருந்தனர். அந்த வாகனத்தின் கீழ் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என எழுதப்பட்டிருந்தது.

Advertisment

ஷூட்டிங் முடியும் வரை அஜித் அந்த முகமூடியை கழட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் முகமூடி அணிந்துகொண்டு வாகனத்தின் மீது அமர்ந்திருந்தவர் அஜித் இல்லை அவரை போன்ற டூப் என்பது தெரியவந்துள்ளது. சண்டைக் காட்சிக்காக அஜித் போல் டூப் போட்டு சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அஜித் மட்டுமல்ல அவர் அருகில் இருந்த மஞ்சு வாரியரும் டூப் என்பது தெரிந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பையும், குடும்பத்தினருடன் சுற்றுலாவையும் முடித்துக்கொண்டு இன்று காலை தான் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போ நேற்று கால்கடுக்க காத்திருந்து பார்த்தது அஜித் இல்லையா என ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர் நெடுநேரம் காத்திருந்த ரசிகர்கள்.

shooting Thunivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe