தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசின் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''மின்வெட்டு என்பது வேறு மின்தடை என்பது வேறு. எனவே மீண்டும் அவையின் கவனத்துக்கு இதைக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு அதிகமாக உள்ளது.அதிமுக ஆட்சியில் ஏற்பட்டது மின் தடை'' என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,''அதிமுக ஆட்சியில் மின்தடை என்றும் திமுக ஆட்சியில் மின்வெட்டு என்றும் கூறுகிறீர்கள். இது தப்பிப்பதற்காக கூறும் வார்த்தைகள். ஆக மொத்தம் பல்பு எரியவில்லை'' என பேசியதால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.