Advertisment

தவெகவில் இணைந்த ஸ்னோலினின் தாயார்

Snowlin's mother, who joined tvk

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்திய நடிகர் விஜய், தொடர்ந்து 26 தீர்மானங்களை நிறைவேற்றினார். தொடர்ந்து அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

நடைப்பயணம் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து கட்சியில் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் உட்பட 300க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில்இணைத்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது உயிரிழந்த ஸ்னோலினின் வீட்டிற்கு நேரில் சென்று விஜய் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாகபட்டினத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.

Advertisment
Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe