Advertisment

கோவிலுக்குள் நுழைந்து பைரவருக்கு பூஜை செய்த பாம்பு

snake worshipped Lord Shiva entering the Bhairava temple

தென்னகத்து காசி என்றழைக்கப்படும்ஸ்வர்ண பைரவர் கோவிலுக்குள் நுழைந்த நாகப்பாம்புதிடீரென சிவனுக்கு பூஜை செய்த சம்பவம்அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியது.

Advertisment

ஈரோடு மாவட்டம் இரட்டைசுற்றிபாளையம் பகுதிக்கு அருகே உள்ளது அவல்பூந்துறை. இந்தப் பகுதியில்தான்தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஸ்வர்ண பைரவர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலில்உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றிவெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து செல்வர்.

Advertisment

இந்தக் கோவிலுக்குள் திடீரென புகுந்த நாகப்பாம்பு நேராக ஸ்வர்ண பைரவரின் சிலையை நோக்கிச் சென்றுள்ளது. அப்போது, சிறிது நேரம் ஸ்வர்ண பைரவரின் சிலையைச் சுற்றிவந்த நாகப்பாம்புஒருகட்டத்தில்சாமியை தரிசனம் செய்யும் வகையில்திடீரென படமெடுத்து ஆடியுள்ளது.அதுமட்டுமல்லாமல், பைரவர் சிலையின் கழுத்துப் பகுதியில் ஏறிக்கொண்ட நாகப்பாம்புஅந்த விக்ரகத்தைப் பின்னும் வகையில் சுற்றி சுற்றி வந்தது. மேலும், இந்த நாகப்பாம்பு பைரவருக்கு பூஜை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், வாசனைப் பூக்களை சாமியின் காலில் தூவி விட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள், பைரவர் சிலைக்கு நாகப்பாம்பு பூஜை செய்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், நாகப்பாம்பே பைரவருக்கு பூஜை செய்துள்ளது என பக்தி பரவசத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

snake Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe