Advertisment

'தன்னை தானே விழுங்க முயன்ற பாம்பு' அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்!

கொலம்பிய நாட்டில் மிகப்பெரிய பாம்புகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தி்ல பாம்பு, ஆமை, முதலை என ஊர்வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு இனபெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் பாம்பு ஒன்று தன்னை தானே விழுங்கும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இதை பாம்பு வல்லுநரான ஜோக்கர் என்பவர் தனது செல்போன் மூலம் பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.

Advertisment

f

அந்த வீடியோவில் அவர் பேசும்போது "பொதுவாக பாம்புகளுக்கு பசி வரும்போது சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்றால் வேறு பாம்புகளை சாப்பிடும். அப்படியாக குணம் கொண்ட பாம்புகள் சில நேரங்களில் தன் வாலை பார்த்து வேறு பாம்பு என நினைத்து அதை சாப்பிட முன்வரும். ஆனால் அது தன் உடல் தான் என உணர்ந்ததும் விட்டுவிடும். ஆனால் இந்த பாம்பு ஏதோ மன அழுத்ததில் இருக்கிறது. அதனால் தன்னை தானே உண்ண முடிவு செய்து தன்னுடைய வால்பகுதியை உண்ண முயல்கிறது" என்றார். இறுதியில் பாம்பு தன்னை தானே சாப்பிட முயன்றதை அவர் தடுத்துவிட்டார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment
snake
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe