snake lying near the temple, Screaming devotees climbed out

Advertisment

திருச்சிசமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டவர்கள் ஆடு, கோழி வேண்டுதல் செலுத்துவது வழக்கம். இதற்காக கோயில் தேரோடும் வீதியில் ஆடு, கோழிகளைக் காணிக்கைகளாக செலுத்தும் இடம் உள்ளது. இங்கு3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று இன்று (18.08.2021) புகுந்தது. இதனால் காணிக்கை செலுத்த வந்தவர்களும் அங்கிருந்தவர்களும் அலறி அடித்து வௌியேறினர்.

அச்சமடைந்த பொதுமக்கள்இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயணைப்பு வீரர்களிடம் சிக்காமல் நல்ல பாம்பு போக்கு காட்டிவந்தது. சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பாம்பு சிக்கியது. பின்பு சாக்கு பையில் எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் பாம்பை பத்திரமாக விட்டனர். இதனால் சமயபுரம் கோயிலில் பரபரப்பு நிலவியது.