Advertisment

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு; கோடை காலத்தில் உஷார் !

வீட்டில் பயன்படுத்தும் வாசிங்மெஷினில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ளது கீழக்கரணை மாரியம்மன் கோவில்தெரு பகுதியைச்சேர்ந்தவர் ராஜலட்சுமி. வழக்கம்போல ராஜலட்சுமி துணியை துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் துணியைப் போட்டுள்ளார். அப்பொழுது மெஷினில் இருந்து வந்தவினோத சத்தத்தை அடுத்து அவர் ஆராய்ந்து பார்க்கையில் உள்ளேபாம்பு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மறைமலை நகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த சாரைப் பாம்பை பிடித்தனர்.

Advertisment

இதேபோல் அண்மையில் கேரளாவில் பள்ளி மாணவியின் ஷூவில் பாம்பு ஒன்று மறைந்திருந்தது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் பள்ளி மாணவியின் புத்தகப்பையில் பாம்பு இருந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கோடை காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் தீயணைப்புத் துறையினர்.

rescued Chengalpattu snake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe