A snake that entered the house; A woman praying with milk

Advertisment

வீட்டிற்குள் புகுந்த பாம்பிற்குப் பால் வைத்து வேண்டிக்கொண்ட பெண்ணின் செயல் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது மூங்கில்குடி எனும் கிராமம். இக்கிராமத்தில் சக்திவேல் லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதை லட்சுமி கவனிக்காததால் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

பாம்பினை பார்த்த லட்சுமியின் வளர்ப்பு நாய் ரோஸி குரைத்து சத்தம் எழுப்பியுள்ளது. இதனால் பாம்பு இருப்பதை லட்சுமி பார்த்து பாம்பினை விரட்டாமல் அதற்கு பால் வைத்து வேண்டியுள்ளார். இதன் பின்னும் பாம்பு அவ்விடத்தை விட்டு நகராததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பினை அடித்துவிடாமல் உடனடியாக காட்டில் விட்டனர்.

Advertisment

பாம்பினைக் கண்டு பயப்படாமல் பாம்பிற்குப் பால் வைத்து வேண்டிக்கொண்ட செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.