திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை தீடீரென இரண்டு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று அலுவலகத்தில் நுழைந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நீண்ட நேரம் படையெடுத்து நின்றதால் அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளே செல்லவும் மற்றும் உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அலுவலக காவலாளி தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக மீட்டுப் பாதுகாப்பான பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.