திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் டாட்டா ஏசி போன்ற வாகனம் ஒன்றில் சமூக விரோதிகள் சிலர் சட்ட விரோதமாக ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் பின் பகுதி வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான சிறிய ரக வாகனத்தை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளான வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு தப்ப முயன்ற சமூக விரோதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.