Published on 23/01/2022 | Edited on 23/01/2022

ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 55 கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 58 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 40 செம்மரகட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.