சார்ஜாவிலிருந்து நேற்று (10.10.2021) இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டபோது, 30 பயணிகளிடம் E மற்றும் I வடிவிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தங்கக் கட்டிகளை எலக்ட்ரானிக் பூச்சிக்கொல்லி இயந்திரம் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றுக்குள் பதுக்கி எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த மொத்த தங்கத்தின் எடை 435 கிராம். இதன் மதிப்பு 20 லட்சத்து 83 ஆயிரத்து 215 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிடிப்பட்ட 30 பயணிகளிடமும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தற்போது விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.