Advertisment

நடு சாலையில் புகைந்த எலக்ட்ரிக் பைக்... மீண்டும் பரபரப்பு!

Smoked electric bike in the middle of the road ... excitement again!

திருப்பூரில் சாலையில் சென்ற எலக்ட்ரிக் பைக் திடீரென அதிகப்படியான புகை வெளியிட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உடனடியாக பேட்டரி நீக்கப்பட்ட நிலையில் பேட்டரியிலிருந்து அதிக அளவு புகை வெளியானது அங்கிருந்தோரை அச்சத்திற்குள்ளாக்கியது.

Advertisment

பேட்டரியில் இருந்து அதிகப்படியான புகை வந்ததால் தீயணைப்பு துறையினருக்கு உரிமையாளர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை அணைத்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே வேலூரில் எலக்ட்ரிக் பைக் எரிந்த சம்பவத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் பைக் எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

incident thirupur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe