/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72731.jpg)
கடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொலை செய்து உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, சுரேஷ்குமார் தம்பதியினர் சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இவர்கள் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ஜோதி நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்சமயம் கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் வசித்து வருகின்றனர். சுகந்த குமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே அவர் மனைவி பிரிந்து சென்று விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும் 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே தினம் கமலேஸ்வரி அவரது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அவரும் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களின் வீட்டு வேலை செய்யும் பணி பெண் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வெளி இரும்பு கேட் பூட்டி இருந்த நிலையில் அவர் மீண்டும் சென்றுள்ளார். அதன் பிறகு அவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரும் இரண்டு நாள் வேலைக்கு வரவில்லை.
திங்கட்கிழமை வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து லேசாக புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பகுதியிலும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் உடல்களை கண்டு அதிர்ந்து போன போலீசார் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72730.jpg)
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரடியாக வந்து விசாரணை செய்தார். சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்தார். அதில் வீட்டில் பணிபுரியும் பெண் மற்றும் உறவினர்கள் வீட்டைச் சுற்றியுள்ள பலரிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது கொலையாக இருக்கும் என தெரிவித்தார். பின்னர் 3 பேர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் சுற்றுவட்டப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)