Advertisment

“2030 ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்” - பிரதமர் மோடி உறுதி

smat india hackaton

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6G தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisment

ஸ்மார்ட் இந்தியாஹாக்கத்தான் நிகழ்ச்சியை மத்திய அரசு 2017 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. சமூக பிரச்சனைகள் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகளைத்தீர்க்க இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கும். 2022ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியாஹாக்கத்தான் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நாடு முழுதும் 75000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் காணொளிக்காட்சியின் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் இணையம் வாயிலாக பேசிய அவர் கடைசி ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் இந்திய பல்வேறு துறைகளில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பல துறைகளில் புரட்சிகள் நடந்துள்ளன. தொழில் நுட்பத்துறை, விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புரட்சி ஏற்பட்டு அவைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளதாக" கூறியுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜிதொழில்நுட்பம் கொண்டுவரப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும்மாணவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 75000 மற்றும் 50000 வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று அறிவிக்கப்படுவார்.

India sih
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe