Small missing pieces of gold jewelry Women who worked at home venture

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் (வயது 57). இவர் தனது வீட்டில் வைத்திருந்த சுமார் 2,50,000 லட்சம் மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகளைக் கடந்த ஓராண்டாக சிறுக சிறுக காணாமல் போயுள்ளது என அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

மேலும் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர் அன்பழகன் பெண் காவலர்கள் திரிபுரசுந்தரி, கோமதி, பிரபா, சுமதி, சங்கரி, ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர். அதில், கோபிநாத் வீட்டில் வேலை பார்த்து வந்த அண்ணாமலை நகர், 20 அம்ச நகர் கொத்தங்குடி தோப்பை சேர்ந்த விஜயா (வயது 50 ) என்பவர் திருடியது தெரியவந்துள்ளது.

அதோடு திருடிய நகைகளைத் தனது வீட்டின் முன்புறமுள்ள வாய்க்கால் அருகே மண்ணில் போட்டுப் புதைத்து வைத்துள்ளதைக் கண்டறிந்து கைப்பற்றி அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.