/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DFYGRETRET.jpg)
சிலமாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது எனஅனுதினமும் சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. இதைவிட சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி பள்ளி மாணவர்கள் ஆயுதங்களுடன் வீடியோக்களை பதிவிடுவது ஏராளம் ஏராளம். அப்படி ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நின்றுகொண்டிருக்கும் ரயிலிலிருந்து இறங்கும் பள்ளி மாணவர்கள் சிலர் திரைப்படங்களில் வில்லன் நடப்பதை போன்று ஸ்லோமோஷனில் நடந்து வருகின்றனர். அதில் மாணவன் ஒருவன் கத்தியை எடுத்து மற்றொரு மாணவனிடம்கொடுக்க அதனை வாங்கிக்கொள்ளும் மாணவன் அதனை வாயில் கவ்வி பிடித்தபடி நடக்கிறான். இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக நான்கு பள்ளி மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கீழ்பாக்கம் சாஸ்திரி நகர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில்இந்த வீடியோவை மாணவர்கள் சூட் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)