மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் இன்று காலை 7 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்கே திரண்டிருந்த திமுக தொண்டர்கள், ‘’வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்’’ என்று முழக்கமிட்டனர்.
முன்னதாக, காலை முதற்கொண்டே தொண்டர்கள், மெரினாவில் இடம் வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். இந்த தேவையில்லை. கலைஞர் வாழ்க என்று முழக்கமிடுங்கள் போதும் என்று திமுக தரப்பில் மைக்கில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தொண்டர்கள், வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும் என்ற முழக்கத்தைத்தான் எழுப்பி வருகின்றனர்.