சற்று குறைந்த தொற்று எண்ணிக்கை- இன்றைய கரோனா நிலவரம்!

A slightly lower number of infections - today's corona situation!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்2,671பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை18,842இருந்து 18,819 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 2,560 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும்844பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 7 நாட்களாககரோனா பாதிப்பு 1,000 என்று பதிவாகிவந்த நிலையில் மூன்றாவதுஇரண்டாவது நாளாகஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. செங்கல்பட்டில்-434பேருக்கும், கோவை-119, குமரி-70, திருவள்ளூர்-151, காஞ்சிபுரம்-78, விழுப்புரம்-34, சேலம்-55, நெல்லை-88, தூத்துக்குடி-65, திருச்சி-48, ராணிப்பேட்டை-56 பேருக்கு என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

health Medical Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe