Slightly lower corona after 7 days !! - Unprecedented corona mortality record

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,978 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்திற்கும் குறைவான கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களாக 6 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. இன்று 59,437 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5,864 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் இன்று 1,175 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்27வதுநாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனாபாதிப்பு சென்னையில் பதிவாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 98,167 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,78,178 அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் என்பது 74.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 97 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 65 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 32 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வேறு நோய்ப் பாதிப்பில்லாதோர்8 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 50 வயதுக்குட்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 61 ஆவது நாளாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதுவரை சென்னையில் அதிகபட்சமாக 2,092 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 246 பேர்,திருவள்ளூரில் 229, மதுரை 233, காஞ்சிபுரம் 110, விருதுநகர் 79, திருச்சியில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவிற்கு 1,746 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் என்பது 1.59 சதவீதமாக உள்ளது.

Advertisment

சென்னை தவிரபிற மாவட்டங்களில் இன்று 4,689 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 7 நாட்களாக 5 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு பதிவான நிலையில் இன்று நான்காயிரத்திற்குக் குறைந்துள்ளது.