Advertisment

தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி அடித்து கொலை... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

slept worker beaten ... Police in intensive investigation

Advertisment

திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த மரம் அறுக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். மணக்கால் ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர், பஞ்சு -இளஞ்சியம் தம்பதியின் மகன் காட்டான் சுரேஷ் (38).

இவர் மரம் அறுக்கும் வேலை மற்றும் மீன்பிடிக்கும் தொழில் செய்துவருகிறார். இவருக்குத் திருமணமான நிலையில், மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். கூலித் தொழில் செய்யும் வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தவர், சாலையோரக் கடைகளில் படுத்து உறங்கிவந்துள்ளார். இந்நிலையில், இன்று (03.08.2021) விடியற்காலையில் மர்ம நபர்கள் அவரை தலையில் கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார், சம்பவ இடத்தில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு ஸ்பார்க் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ஸ்பார்க், காமராஜபுரம் பகுதியில் சுற்றி வந்தது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்தக் கொலை, மதுபோதையில் நடந்ததா அல்லது வீட்டின் சொத்துப் பிரச்சனைக்காக நடந்ததா என்ற கோணத்தில் லால்குடி போலீசார் விசாரித்துவருகின்றனர். பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

incident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe