
கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவை மூடிய செவிலியர்கள் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதாக வெளியான தகவல்களும், சிகிச்சைக்கு வந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவின் கதவை தட்டிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைக்கு வந்தவர்கள் கதவை நீண்டநேரமாக தட்டிக் கொண்டே இருந்தனர். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. ஒரு மணிநேரம் கழித்து கதவை திறந்த செவிலியர் சாணிமருந்து குடித்த பெண்ணுக்கு சிகிச்சை கொடுத்துள்ளார். இருப்பினும் நீண்ட நேரம் அவசர சிகிச்சை பிரிவின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)