Slander about Muslims in WhatsApp status

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை, கூடநகரம் சாலை பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் கார்த்திக். இவர் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறான கருத்து கொண்ட பதிவை வைத்துள்ளார். அந்த பதிவைப் பார்த்த அப்பகுதி இஸ்லாமியர்கள் கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 200க்கும் மேற்பட்டவர்கள் அவரது நகைக்கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Advertisment

போராட்டத்தில் கார்த்திக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Advertisment

Slander about Muslims in WhatsApp status

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கை குடியாத்தம் நகரக் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இரவில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.